மத்தூரில் மஜத பிரமுகர் கொலை தொடர்பான கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மண்டியா மாவட்டம், மத்தூரில் மஜத பிரமுகர் பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது என்றாலும், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் குமாரசாமி, கொலையாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், முதல்வர் குமாரசாமியே சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது தவறாகும். இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
பாஜக ஆட்சியில் இருந்த போது, பாஜகவைச் சேர்ந்த பல பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக நாங்கள் இது போன்ற கருத்துகளை தெரிவிக்கவில்லை. முதல்வராக பதவி வகிக்கும் குமாரசாமி அப்பதவிக்கான கெளரவத்தை வழங்கவில்லை என்றார்.
மேலும், அமைச்சரவை விரிவாக்கம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. மாநிலத்தில் வறட்சி, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வளர்ச்சிப் பணிகளில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



