முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து அவருக்கு தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி தலம் பகுதியில் ரூ.10.51 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. சதைவ் தலம் என பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவிடம் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று திறக்கப்பட்டது.
இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள், வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதையும் செலுத்தினர்.
இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. முன்னதாக வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: அமெரிக்க படைகளின் வான் வழி தாக்குதல் குறித்து டிரம்ப்

நாட்டின் நீண்டகால பிரதமராக இருப்பேன் என கற்பனை கூட செய்ததில்லை : பிரதமர் மோடி
சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

ரூ. 15 லட்சம் கோடி சர்ச்சை... பேசுபொருளான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்! செபிக்கு ஒத்துழைக்கத் தயார்!!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



