டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பேருந்து பயணத்தை செல்போனில் விடியோ எடுத்த முதல்வர் விஜய்!

பெரம்பூர் பேருந்து பயணத்தை முதல்வர் விஜய் விடியோ எடுத்துக்கொண்டு சென்றது குறித்து...

News image

பேருந்து பயணத்தின்போது தனது செல்போனில் விடியோ எடுக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் - DIPR

Updated On :25 ஜூன் 2026, 10:59 am IST

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு 300 பேருந்துகளை தொடக்கி வைத்து அதில் ஒரு பேருந்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25)பயணம் செய்தார்.

பயணத்தின்போது நடத்துனர் பேருந்து ஓட்டுவதையும் வெளியே இருந்த தொண்டர்கள் கையசைப்பதையும், வழித்தடப் பாதையையும் தனது செல்போனில் முதல்வர் விடியோ பதிவு செய்தார்.

இதுமட்டுமின்று பேருந்திற்குள் அமர்ந்திருந்த அனைவரையும் தனது செல்போனில் விடியோ பதிவு செய்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் (முதல்வர் விஜய் தொகுதி) செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கலங்கரை விளக்கம் வரை அவர் பயணம் செய்தார்.

பேருந்தில் விடியோ எடுத்தவாறு முதல்வர் விஜய்

பேருந்தில் விடியோ எடுத்தவாறு முதல்வர் விஜய் - DIPR

பயணத்தின்போது நடத்துனரிடம் டிக்கெட்டுக்கான காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணித்தார். பின்னர் நடந்த்துனரையும் தனது அருகே இருக்கையில் அமரவைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தார்.

பின்னர் முன் இருக்கைக்குச் சென்ற விஜய், தனது செல்போனில் ஒட்டுநரையும், பேருந்து வழித்தட சாலையையும் விடியோ பதிவு செய்தார். வெளியே சாலையோரம் நின்றுருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு, அதனையும் விடியோ பதிவு செய்தார்.

Summary

Chief Minister joseph Vijay records a video of the bus journey on his mobile phone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.