குஜராத் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததையொட்டி, ரூ.666 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
குஜராத் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரூ.666 கோடி மதிப்பிலான 5,538 திட்டங்களை முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.
புதிதாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி முறையில் அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி காந்திநகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. மாணவர்கள், பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருடன் அவர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அவர் இரண்டாவது முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









