ராஜஸ்தானில் விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் பிடிஐ செய்தியாளருக்கு அந்த மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அளித்த பேட்டி வருமாறு:
ராஜஸ்தானில் ஆட்சியமைத்த முதல் நாளிலேயே விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே அரசு செயல்பட தொடங்கி விட்டது. ராஜஸ்தானில் விவசாயிகள் பிரச்னை மிக தீவிரமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்கும். விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.
இதேபோல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இந்த 2 பிரச்னைகள் தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்.
இதற்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையை போல, இந்த முறையும் தேர்தல் அறிக்கையை மாநில தலைமை செயலரிடம் அளிப்போம். பின்னர் அரசின் செயல்பாடு குறித்த அதிகாரப்பூர்வ ஆவணமாக அதை மாற்ற கூறுவோம்.
ராஜஸ்தானில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினால் நிதிச்சுமை ஏற்படுவது குறித்து கேட்கிறீர்கள். இந்த சவாலை எதிர்கொள்ளும் திறன், அரசுக்கு உள்ளது. அரசியல் ரீதியில் துணிச்சல் இருந்தால், நிதி ஆதாரங்களை மேலாண்மை செய்வது பெரிய விவகாரமாக இருக்காது. முன்பு மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, ரூ.72,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இதேபோல், ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்.
விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பானது, விவசாயிகளுக்கு வெறும் உதவியாக மட்டும் இருக்காது. விவசாயிகளின் பிரச்னைகள், கோரிக்கைகளை கேட்பதற்கு புதிய அரசு தயாராக உள்ளது என்ற செய்தியையும் அவர்களுக்கு அளிக்கும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, புதியவர்களை வேலைக்கு தேர்வு செய்வது தொடர்பான அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கிவிட்டது.
ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இளைஞர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருக்கு சமமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம், உபேந்திர குஷ்வாகாவின் லோக் சமதா கட்சி ஆகியன வெளியேறி விட்டன. சிவசேனையும் பாஜகவுடன் இல்லை. இதற்கு பாஜக தலைவர்களின் ஆணவமான போக்கே காரணம். கூட்டணி கட்சிகள் விலகி வருவதால், பாஜக கடும் நிர்ப்பந்தத்தில் உள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார் சச்சின் பைலட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக்அவுட் சுற்று நம்பிக்கையில்...
தமிழகம் எதிர்கொள்ளும்!

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


