சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உத்தரப் பிரதேச அரசு தோல்வி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் தோல்வியடைந்து விட்டதாக

News image
Updated On :26 டிசம்பர் 2018, 12:59 am IST


உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் தோல்வியடைந்து விட்டதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து, லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் அவர் கூறியதாவது:
சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். கடன்சுமை அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாநில இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழந்து காணப்படுகிறது. இளம்தலைமுறையினரின் கனவுகளை பாஜக அரசு குழி தோண்டி புதைத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் மாநில அரசு தோல்வி கண்டுள்ளது.
தனக்குச் சிறிய அளவில் எதிர்ப்பு ஏற்படுவதையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை. தங்களது பிரச்னைகளைத் தெரிவிக்கும் இளைஞர்களை மாநில அரசு சிறைக்கு அனுப்பி வைக்கிறது. மாணவிகளும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்றார் அவர்.
லக்னௌவில் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு காரில் சென்றபோது சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், காரை மறித்து கருப்புக் கொடி காட்டினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், 2 மாணவிகளும் அடங்குவர். 20 நாள்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.