கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

2018ம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்ஸ் பட்டியல்! நிச்சயம் அதிர்ச்சி தரும்!!

எத்தனை ஆண்டுகள் தான் தேசிய, மாநில நினைவலைகளை பார்ப்பது? வாங்க 2018ல் நம்மளவில் எப்படியெல்லாம் சொதப்பியிருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

News image
Updated On :29 டிசம்பர் 2018, 10:39 am


எத்தனை ஆண்டுகள் தான் தேசிய, மாநில நினைவலைகளை பார்ப்பது? வாங்க 2018ல் நம்மளவில் எப்படியெல்லாம் சொதப்பியிருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

எத்தனை முறைதான் இணையதளத்தில் பாஸ்வோர்ட் வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பலரும் இதுவரை மாறவில்லை. 2018ம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட 100 பாஸ்வேர்டுகளின் பட்டியலை ஸ்ப்லாஷ்டேட்டா வெளியிட்டுள்ளது. அது ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆச்சரியமாக இல்லை என்பதே ஆச்சரியம்.

கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இன்னமும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டாக 123456 மற்றும் password என்பதே முதலிடங்களைப் பிடித்துள்ளது. இதேப்போலவே 123456789 மற்றும் 12345678 எண்களும் உள்ளன. இதோடு சன்ஷைன், குவெர்ட்டி, 111111 மற்றும் ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த பட்டியல்களை எல்லாம் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாக தெரிய வந்திருக்கும் விஷயம் என்னவென்றால், பலரும் இன்னமும் தங்களது சமூகப் பக்கம், வங்கிக் கணக்கு போன்றவற்றுக்கு பலமான பாஸ்வேர்டை வைப்பதில்லை என்பதும், இது ஹேக்கர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து விடுவதும் தெரிகிறது.

சில பாஸ்வேர்டுகள் ஒரு சில முயற்சிகளிலேயே கண்டுபிடித்து விடக் கூடியவையாக அமைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பாஸ்வேர்ட் வைக்கச் சொன்னால் பாஸ்வேர்ட்டையே பாஸ்வேர்டாக வைப்பது, செக்யூரிட்டி முக்கியம் என்றால், செக்யூரிட்டி என்றும், எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள 12345 என்பதும் இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் பாஸ்வேர்டாக இருக்கப் போகிறதோ? அந்த 2019க்கே வெளிச்சம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.