டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சபரிமலை: 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு 

கேரள மாநிலம், சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:00 pm

DIN

பத்தனம்திட்டா:  கேரள மாநிலம், சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதை எதிர்த்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் குதித்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போராட்டங்கள் நீடித்ததால் காரணமாக சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி. நுவா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.