புது தில்லி: சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பிரதமர் மோடி வானொலி வழியாக பொதுமக்களுக்கு உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அவர் தனது உரையில் பேசியதாவது:
சமீபத்தில் மறைந்த சென்னை டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார்.
இதேபோல 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார்.
குஜராத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சர்தார்படேல் சிலையானது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமாக விளங்குகிறது.
பொதுவாகவே நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்து நடைபெறுகின்றன. மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாகவே பண்டிகை சமயங்களில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படங்களை பகிர்வதன் மூலமாக இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
2018-ம் ஆண்டில் இந்திய மக்களுக்கு உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் 95 சதவீத கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

ஷாட் கன் உலகக் கோப்பை: இந்தியர்கள் தடுமாற்றம்
சா்வோதயா என்கிளேவ் கொள்ளை: ரெளடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


