போபால்: மத்திய பிரதேசத்தில் பழுப்பட்ட மின்மாற்றியை மாற்றித் தருமாறு காலில் விழுந்து கதறிய விவசாயியை, மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளாமல் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மின்மாற்றி பழுதாகி விட்டது. இதனால் அங்குள்ள வயல்களுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் பயிர்கள் நீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்கு வந்திருந்தார். அப்போது அவர் சென்ற நேரத்தில் அலுவலகத்தை விட்டு செல்வதற்காக பெண் ஆட்சியர் வெளியே வந்தார்.
ஆட்சியரைப் பார்த்த விவசாயி உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை விரைந்து மாற்றிப் பொருத்த வேண்டும் என்று அவரது காலில் விழுந்து முறையிட்டார்.
ஆனால் அதனைச் சற்றும் பொருட்படுத்தாத ஆட்சியர் விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டு, காரின் கண்ணாடியை சற்று இறக்கி காரில் இருந்தவாறே பதில் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
விவசாயியை மதிக்காத ஆட்சியரின் இந்த போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியரின் காலடியில் விவசாயி அழுது புலம்பும் காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


