எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாஜகவில் நடிகை மகாஸ்வேதா ராய்

ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் ஒடியா மொழி நடிகை மகாஸ்வேதா ராய், பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 8:39 pm

DIN

ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் ஒடியா மொழி நடிகை மகாஸ்வேதா ராய், பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தார்.
புவனேசுவரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
ஒடியா மொழி நடிகர்களான மிஹிர் தாஸ், அனு சௌதரி ஆகியோர் பாஜகவில் கடந்த மாதம் இணைந்தனர். இதையடுத்து, பாஜகவில் பழம்பெரும் நடிகையான மகாஸ்வேதா ராய் இணைந்துள்ளார்.
ஒடியா மொழி திரையுலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் மகாஸ்வேதா ராய், வங்க மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
55 வயதாகும் மகாஸ்வேதா ராய், கடந்த 1976ஆம் ஆண்டில் சேஷா ஸ்ரபணா எனும் திரைப்படத்தின் மூலம் ஒடியா மொழி திரையுலகில் அறிமுகமானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.