வீரபத்ர சிங்குக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், ஹிமாசலப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்குக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம்
வீரபத்ர சிங்குக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்
Updated on
1 min read

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், ஹிமாசலப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்குக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, மத்திய அமைச்சராக இருந்த வீரபத்ர சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 
இதை அடிப்படையாகக் கொண்டு, வீரபத்ர சிங், உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியே வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் ஸ்நேகி மான் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், "வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உள்ளிட்ட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன்; ஆதலால், அவர்கள் அனைவருக்கும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிடுகிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com