விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எது உயர்ந்ததோ இல்லையோ.. மோடி ஆட்சியில் வழக்குரைஞர்களுக்கான செலவு உயர்ந்துள்ளது!

2014ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நீதிமன்றங்களில் மத்திய அரசு சார்பில் வாதாடும் வழக்குரைஞர்களுக்காக செலவிடும் தொகை படிப்படியாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 8:48 am

DIN


புது தில்லி: 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நீதிமன்றங்களில் மத்திய அரசு சார்பில் வாதாடும் வழக்குரைஞர்களுக்காக செலவிடும் தொகை படிப்படியாக உயர்ந்துள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கடந்த 4 ஆண்டுகளில் வழக்குரைஞர்களுக்கு மத்திய அரசு செலவிடும் தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, 2014-15ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றங்களில் வாதாடும் வழக்குரைஞர்களுக்கு அளித்த கட்டணம் ரூ.28.46 கோடியாக இருந்த நிலையில், இது 2017-18ம் ஆண்டுகளில் ரூ.54.37 கோடியாக உயர்ந்துள்ளது. 

மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதே இதற்கு முதல் காரணம். ஆதார் எண், பணமதிப்பிழக்கம், முத்தலாக் என பல திட்டங்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆதார் அட்டைக்கு எதிராக மட்டுமே சுமார் 27 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2012ம் ஆண்டு முதலே ஆதார் அட்டைக்கு எதிராக வழக்குகள் ஆரம்பித்துவிட்டன. 2016-17ல், அரசு திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியதும் வழக்குகள் அதிகரித்துவிட்டதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழக்கத்துக்கு எதிராக 12க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் பலவும் உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. முத்தலாக்குக்கு எதிராகவும் 6க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 3.13 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அதில் 46 சதவீத வழக்குகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து எதிர்கொண்டு வருகின்றன.

இதில் அதிகபட்சமாக மத்திய ரயில்வே துறைக்கு எதிராக மட்டும் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கடுத்தபடியாக மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு எதிராக 15,700 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.