தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

முதலில் காதலர் தினத்திற்கு  கட்டுப்பாடு; பின்னர் மாணவர்களுக்கு சாத்தப்பட்ட கதவு: 'கலகல' பல்கலைக்கழகம்! 

காதலர் தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை என்று முதலில் அறிவித்த லக்னௌ பல்கலைகழகம், பின்னர் பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்களை.. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:45 pm IST

லக்னௌ: காதலர் தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித் திரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை என்று முதலில் அறிவித்த லக்னௌ பல்கலைகழகம், பின்னர் பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்களை அனுமதிக்காத வினோத சம்பவம் நடந்துள்ளது. 

புதனனன்று உலகெங்கும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லக்னௌ பல்கலைக்கழக  நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு  இருந்தாவது:

மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடுகின்றனர். ஆனால் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது.

முன்னரே திட்டமிடப்பட்டுள்ள பிராக்டிகல் வகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். எனவே தொடர்பற்ற பிற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.

மாணவர்களை அவர்களின் பெற்றோர்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் ஜோடியாக உட்கார்ந்திருந்தாலோ நடமாடினாலோ, பெண்களைப் பார்த்து கேலி செய்தாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த சுற்றரிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் புதனன்று லக்னௌ பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு எந்த விளக்கமும் நிர்வாகத்தின் தரப்பில் கொடுக்கப்படவும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.