பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காங்கிரஸை ஆதரிக்கிறாரா அமிதாப்?

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் திடீரென்று சில காங்கிரஸ் தலைவர்களின் சுட்டுரைப் பக்கத்தை பின்தொடர்வது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:34 pm

DIN

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் திடீரென்று சில காங்கிரஸ் தலைவர்களின் சுட்டுரைப் பக்கத்தை பின்தொடர்வது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
நடிகர் அமிதாப், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் சுட்டுரைப் பக்கத்தையும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சுட்டுரைப் பக்கத்தையும் பின்பற்றி வருகிறார். அவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கபில் சிபல், அகமது படேல், அசோக் கெலாட், அஜய் மாக்கன், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், சி.பி.ஜோஷி ஆகியோரின் சுட்டுரைப் பக்கங்களை இந்த மாதத்தில் இருந்து பின்தொடர்கிறார்.
அதுமட்டுமன்றி, மணீஷ் திவாரி, ஷக்கீல் அகமது, சஞ்சய் நிருபம், ரண்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா சதுர்வேதி, சஞ்சய் ஜா ஆகியோரின் வலைப்பூ பக்கங்களையும் அமிதாப் பச்சன் பின்தொடரத் தொடங்கியுள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக இருக்கும் அமிதாப் பச்சன், ஒரு காலத்தில் நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும், ராஜீவ் காந்தியின நண்பராகவும் இருந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியுடனான நெருக்கத்தை அவர் குறைத்துக் கொண்டார். இந்நிலையில், அவர் திடீரென்று காங்கிரஸ் கட்சி மீது நேசம் காட்டுவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், அவரது மகள் மிஸா பாரதி, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரின் சுட்டுரைப் பக்கங்களையும் அமிதாப் பச்சன் சமீபகாலமாக பின்தொடர்ந்து வருகிறார்.
அமிதாப் பச்சனின் சுட்டுரைப் பக்கத்தை 3.31 கோடி பேர் பின்பற்றுகிறார்கள். ஆனால், அவர் 1,689 பேரின் சுட்டுரைப் பக்கங்களை மட்டும் பின்பற்றுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.