

அணுகுண்டுகளை சுமந்துச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமையுடைய பிருத்வி-2 ஏவுகணையை இந்தியா நேற்றிரவு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
ஒடிஸா மாநிலம், பாலசோர் அருகே உள்ள சண்டிப்பூரில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிருத்வி 2 இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை அடையாளம் கண்டு துல்லியமாக தாக்கி அழித்தது. இதையடுத்து ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை, 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ முதல் 1,000 கிலோ எடை வரை அணுகுண்டுகள் உள்ளிட்ட வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.