ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்க ஜார்கண்ட் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டணை விதித்தது. அதனைத் தொடர்ந்து லாலு தற்பொழுது ராஞ்சி பிஸ்ரா முண்டா சிறைச்சாலையில் இருக்கிறார். அவர் இதுவரை மூன்று வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லாலு தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று ஜார்கண்ட் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவரது மனுவினைத் தள்ளுபடி செய்து நீதிபதி அபரேஷ் குமார் சிங் கூறியதாவது:
ஊழல் காலத்திலேயே லாலு பிரசாத், பீகாரின் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். அனைத்து மோசடி ஊழல்களுமே அவரது தலைமையின் கீழ் நடந்துள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


