'இந்திய வரலாற்றில் முதன்முறையாக'- கொல்கத்தாவில் மிதக்கும் மார்கெட் அறிமுகம்!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் மிதக்கும் மார்கெட் திறக்கப்பட்டுள்ளது.
'இந்திய வரலாற்றில் முதன்முறையாக'- கொல்கத்தாவில் மிதக்கும் மார்கெட் அறிமுகம்!
Updated on
1 min read

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இந்தியாவிலேயே முதன்முறையாக மிதக்கும் மார்கெட் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக அங்குள்ள படூலி ஏரிக்ரையில் படகுகளால் ஆன மிதக்கும் மார்கெட்டை புதன்கிழமை திறந்துவைத்தார்.

இங்கு தற்போதைக்கு காய்கறி, பழ வகைகள் மற்றும் மீன் வகைகள் மட்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்கு ஏற்படும் வரவேற்பை அடுத்து இதர பொருட்களும் சந்தைப்படுத்தப்படவுள்ளன.

இத்தாலியின் வெனீஸ் நகரில் படகுப் போக்குவரத்து மிகப்பிரபலம். அது தலைசிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அங்கு இதுபோன்ற மிதக்கும் மார்கெட்டுகள் மிகப் பிரபலம். மேலும் சில பகுதிகளிலும் இதுபோன்று இடம்பெற்றுள்ளது.

ஆனால், இந்தியாவிலேயே இதுபோன்று மிதக்கும் மார்கெட் அமைவது இதுவே முதன்முறையாகும். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அபினித் என்பவர் கூறுகையில்,

இது முற்றிலும் புதிதாக உள்ளது. இதர மார்கெட்களைப் போன்று இங்கும் விலைவாசி சமமாகவே இருக்கிறது. தற்போது காய்கறி, பழங்கள் மற்றும் மீன் விற்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இன்னும் சில பொருட்களை விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com