இது எத்தனையாவது குடியரசு தினம்? தடுமாறிய அமைச்சர்; நெளிந்த அதிகாரிகள்! 

உத்தரப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மாநில அமைச்சர் ஒருவர் நாட்டின் குடியரசு தினத்தினை தவறாகக் கூறியதுஅனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இது எத்தனையாவது குடியரசு தினம்? தடுமாறிய அமைச்சர்; நெளிந்த அதிகாரிகள்! 

அலிகார்: உத்தரப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மாநில அமைச்சர் ஒருவர் நாட்டின் குடியரசு தினத்தினை தவறாகக் கூறியதுஅனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

69-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெள்ளியன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அட்ரோலி தொகுதி எம்.எல்.ஏவும், மாநில அடிப்படை மற்றும் உயர் கல்வி இணை அமைச்சருமான சந்தீப் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது, "இன்று நாம் நமது நாட்டின் 59-வது குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்" எனக் கூறினார்.

இதனைக் கேட்ட அங்கு இருந்தவர்கள் மத்தியில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் திருத்தியவுடன் சந்தீப் சிங் மாற்றி மீண்டும் 69-வது குடியரசு தினம் எனக் குறிப்பிட்டார்.

மாநில அமைச்சர் ஒருவரே குடியரசு தின விழா பற்றி தவறான தகவலைக் கூறியதுஅனைவருக்கும் நகைப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com