வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் மோடி - பூடான் பிரதமர் டோப்கே சந்திப்பு 

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டோப்கேவை, இந்தியப் பிரதமர் மோடி தில்லி ஹைதாராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :6 ஜூலை 2018, 10:28 am

DIN

புது தில்லி: மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டோப்கேவை, இந்தியப் பிரதமர் மோடி தில்லி ஹைதாராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தியா மற்றும் பூடான் இடையே தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாடும் விதமாக, இந்தியா வருமாறு  பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே மூன்று நாள் சுற்றுப்பயணமாக   இந்தியா வந்துள்ளார்.

வியாழன் அன்று இந்தியா வந்த டோப்கேவை  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்நிலையில் தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில்  பூடான் பிரதமர் டோப்கேவை பிரதமர் மோடி வெள்ளியன்று சந்தித்து பேசினார்.  இந்த  சந்திப்பின் போது பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு  ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.