வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

துக்க வீட்டில் எடுத்த செல்பியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் 

கேரளாவில் கல்லூரித் தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பொழுது எடுத்த செல்பியால், பிரபல மலையாள நடிகருக்கு கண்டனங்கள் குவிகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:10 pm

DIN

கொச்சி: கேரளாவில் கல்லூரித் தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பொழுது எடுத்த செல்பியால், பிரபல மலையாள நடிகருக்கு கண்டனங்கள் குவிகிறது  

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த அபிமன்யூ படித்து வந்தார். அவர் கல்லூரியில் உள்ள  இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு ஒன்றின் காரணமாக, இன்னொரு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சிலர்  சேர்ந்து அபிமன்யூவை கொலை செய்து விட்டனர்.

மாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் சுரேஷ்கோபி  வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இது கேரளாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துக்கம் விசாரிக்கச் சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.