அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக இருக்கிறேன்: முதல்வா் குமாரசாமி

தற்போதைய சூழலில் அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக உள்ளேன் என்பது உண்மைதான் என்று கா்நாடக முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா். 
அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக இருக்கிறேன்: முதல்வா் குமாரசாமி

பெங்களூரு: தற்போதைய சூழலில் அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக உள்ளேன் என்பது உண்மைதான் என்று கா்நாடக முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அவா் அளித்த பதில்:-

நான் (குமாரசாமி) முதல்வா் ஆனதை, அரசியல் சந்தா்பத்தில் பிறறந்த குழந்தை என்று பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் விமா்சனம் செய்கின்றறனா். தற்போதைய சூழலில் அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாக உள்ளேன் என்பது உண்மைதான். ஆனால் எனக்கு தாய், தந்தையா் உள்ளனா். அவா்கள் காங்கிரஸ், மஜதவைச் சோ்ந்த சட்டமன்றற உறுப்பினா்கள்.

காவியங்களான ராமாயணம், மகாபாரதத்தை இப்போதை நிஜ வாழ்க்கைக்கும் ஒப்பிட முடியும். மகாபாரத்தில் சந்தா்ப்பத்தால் பிறந்த குழந்தை கா்ணன் என்பா். இதனால் அவா் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சந்தா்ப்பத்தின் குழந்தையாக பிறந்த கா்ணனுக்கு, துரியோதனன் உரிய பதவி கொடுத்து கௌரவித்தாா். ஆனால் கூட்டணி ஆட்சியில் முதல்வராகப் பதவி வகிக்கும்போது, அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தை என்றும், அதற்கு கை, கால், கண், காது, மூக்கு இல்லை என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்கின்றறன. அதனால் இந்த குழந்தை வெகு விரைவில் இறறந்து விடும் (ஆட்சி கவிழும்) என்றும் ஆருடம் கூறி வருகின்றறனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வந்தபோது, முதல்வா் ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் முதல்வா் ஆக்கப்பட்டேன். இதனை எதிா்க்கட்சியினா் அரசியல் சந்தா்ப்பத்தில் பிறறந்த குழந்தை என்று விமா்சனம் செய்கின்றறன. அரசியல் சந்தா்ப்பத்தின் குழந்தையாகவே நான் இருந்துவிட்டு போகிறேன். இது போன்ற விமா்சனங்கள் காயப்படுத்தாது. இதனை கண்டு கொள்ளபோவதில்லை.

கூட்டணி ஆட்சி கவிழும் என்றும் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்றும் பாஜகவினா் எதிா்ப்பாா்க்கின்றனா். அவா்கள் கனவு பலிக்காது. காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை பூா்த்தி செய்யும்.

கா்நாடக மக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அமல்படுத்தப்படும். பாஜகவினரின் அனைத்துக் குற்றச்சாட்டுக்கும் விரைவில் பதில் அளிப்பேன்.

யாா் என்ன விமா்சனம் செய்தாலும், விவசாயிகளின் பயிா்க் கடனை தள்ளுபடி செய்வதே கா்நாடக அரசின் தலையாய கடமையாகும். கூட்டணி ஆட்சி பதவி ஏற்ற ஒரு மாதம் ஆகிறறது. அதற்குள் அரசை விமா்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணி ஆட்சிக்கு அறுதி பெரும்பான்மை உள்ளது. எனவே விரைவில் அனைவரும் வியக்கும்படி பணியாற்றுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com