ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாக்கவில்லை; மாறாக, அது, ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான தனியுரிமை எனக் கருதி அக்கட்சி செயல்பட்டு வந்தது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியுள்ளார்.
ஜனநாயகம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாம்பித் பத்ரா இவ்வாறு கூறியுள்ளார்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பேசிய கார்கே, தேநீர் விற்பனை செய்தவர் கூட நாட்டின் பிரதமராக முடிகிறது. இதற்கு இத்தனை ஆண்டுகள் ஜனநாயகத்தைக் காங்கிரஸ் கட்சி பாதுகாத்து வந்ததுதான் காரணம்' என்றார்.
அவரது கருத்து, சாம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார். பிகார் மாநிலம், பாட்னாவுக்கு திங்கள்கிழமை சென்ற சாம்பித் பத்ரா, இதுதொடர்பாக கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லை. மாறாக, ஜனநாயகம் என்பதே ஒரே ஒரு குடும்பத்தின் தனியுரிமை எனக் கருதி அக்கட்சி செயல்பட்டு வந்தது. முதலில் நேரு, பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என தொடர்ந்து, தற்போது ராகுல் காந்தி அந்த உரிமையைப் பெற்றுள்ளார். ஒரே ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஜனநாயகத்தை தனிச்சொத்தாக காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது.
இந்தியாவில் பாஜக மற்றும் ஜன சங்கத் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பங்களிப்பால் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, ஜனநாயக உரிமைக்காக பல தலைவர்கள் போராடினார்கள்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான ஆதார விலையை 1.5 மடங்கு உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் (2013-14)-இல் நெல்லுக்கான ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ1,310-ஆக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரூ.1,550-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, நெல்லுக்கான ஆதார விலை ரூ.1,750-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.440-ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்றார் சாம்பித் பத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

