வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தென்கொரிய அதிபருடன் சுஷ்மா சந்திப்பு

இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது,

News image
Updated On :9 ஜூலை 2018, 7:26 pm

இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது, இரு தரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். பல்வேறு துறைகளில் ராஜ்ஜீய ரீதியில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்' என்று தெரிவித்துள்ளார். மேலும், சுஷ்மாவும் மூன் ஜே-இன்னும் சந்தித்த படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், பிரதமர் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.