குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தி: அடித்துக் கொல்லப்பட்ட ஹைதராபாத் பொறியாளர் 

வாட்ஸ்-அப்பில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தியால், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஹைதராபாத் பொறியாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரச் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தி: அடித்துக் கொல்லப்பட்ட ஹைதராபாத் பொறியாளர் 

பெங்களூரு: வாட்ஸ்-அப்பில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தியால், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஹைதராபாத் பொறியாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரச் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

இந்தியா முழுவதுமே குழந்தை கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்திகளால் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லபப்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் முகமது அசாம் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி  வருகிறார். கத்தாரில் இருந்த வந்த இவரது நண்பர் முகம்மது சலாம் மற்றும் உறவினர்களுடன் பிதார் மாவட்டம் முர்கி கிராமம் வழியாக   காரில் சென்றுள்ளார். கிராமத்தில் சாலை ஓரத்திலிருந்த கடையில் காரை நிறுத்தியுள்ளனர், அப்போது அங்கு வந்த பள்ளி குழந்தைகளுக்கு, கர்த்தாரில் இருந்து சலாம் கொண்டு வந்த சாக்லேட்களை முகமது அசாம் வழங்கியுள்ளார்.

ஆனால் குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தியை நம்பிய கிராம மக்கள்  சிலர் அவர்களை தவறாக நினைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை மோட்டார் சைக்கிளில் வேகமாக பின்தொடர்ந்து உள்ளனர். அப்போது வேகமாகச் சென்ற கார், கட்டுப்பாட்டினை இழந்து சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள் சிக்கியது. ஆனால் அப்பொழுதும் அவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில் யாரும் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை.

இதுதொடர்பாக தகவல் தெரிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அப்போது முகமது அசாம் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. மற்றவர்களை போலீஸ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் பிதார் பகுதி போலீஸார் 30-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com