நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கருப்புப் பணம் குறித்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுப்பு

வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கும் இந்தியர்களுக்கு சொந்தமான கருப்புப் பணம் குறித்து அளிக்கப்பட்ட 3 அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுத்து விட்டது.

Updated On :24 ஜூலை 2018, 1:20 am IST

வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கும் இந்தியர்களுக்கு சொந்தமான கருப்புப் பணம் குறித்து அளிக்கப்பட்ட 3 அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுத்து விட்டது.
மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசால், கருப்புப் பணம் குறித்து ஆய்வு நடத்த தில்லியைச் சேர்ந்த 2 நிறுவனங்களும், பரிதாபாதை சேர்ந்த ஒரு நிறுவனமும் அமர்த்தப்பட்டன. அந்த 3 நிறுவனங்களும் தங்களது அறிக்கைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளன. அந்த அறிக்கைகளின் நகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மத்திய நிதியமைச்சகத்திடம் பிடிஐ செய்தியாளர் கோரியிருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லியைச் சேர்ந்த என்.ஐ.பி.எஃப்.ஏ.பி., என்.சி.ஏ.இ.ஆர். ஆகிய நிறுவனங்களும், பரிதாபாதைச் சேர்ந்த என்.ஐ.எஃப்.எம். நிறுவனமும் தங்களது அறிக்கைகளை மத்திய அரசிடம் முறையே கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி, 2014ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆகிய நாள்களில் தாக்கல் செய்தன.
இந்த அறிக்கைகள், நிதித்துறைக்கான நிலைக்குழுவிடம் கடந்த ஆண்டு 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த அறிக்கைகளை நிதித்துறைக்கான நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அறிக்கைகள் தொடர்பான நகல்களை வெளியிடுவது என்பது நாடாளுமன்றத்தின் உரிமையை மீறும் செயலாகும். அதுமட்டுமில்லாமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(சி) பிரிவின்கீழ், இந்த தகவலை அளிப்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இந்தியர்களால் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல், மத்திய அரசிடம் இல்லை. 
இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பினான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு வெளியிட்ட ஆய்வுத் தகவலில், 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், இந்தியாவுக்குள் சுமார் ரூ.52.97 லட்சம் கோடி (770 பில்லியன் டாலர்) மதிப்புக்கு கருப்பு பணம் வந்திருப்பதாகவும், அதே காலக்கட்டத்தில் சுமார் ரூ.11.35 லட்சம் கோடி கருப்பு பணம், நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.