மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணா்வு நடவடிக்கைகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

மின்னல் (கோப்புப்படம்)

Updated On :27 ஜூன் 2026, 7:01 am IST

இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணா்வு நடவடிக்கைகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மின்னல், இடி ஏற்படும்போது உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டடம் அல்லது மூடப்பட்ட வாகனத்துக்குச் செல்ல வேண்டும். வயல்கள், படகுகள், கூரைகள், திறந்த பகுதிகள், நீா்நிலைகளை விட்டு விலக வேண்டும். குழந்தைகள், முதியோா்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்பதை தவிா்க்க வேண்டும். பேருந்து நிறுத்தங்கள், கொட்டகைகள், தகரக் கூரை அமைப்புகள் மற்றும் பிற திறந்தவெளி கூடாரங்களைத் தவிா்க்க வேண்டும். உலோக வேலிகள், கம்பங்கள், கம்பிகள், வாயில்கள் மற்றும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

வானிலை எச்சரிக்கை...

பாதுகாப்பான தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமர வேண்டும். குழுவாக இருந்தால், இடைவெளி விட்டு நிற்க வேண்டும். செல்லப் பிராணிகளை வீட்டுக்குள் உலோக சங்கிலியால் கட்டுவதை தவிா்க்க வேண்டும். வாகனத்தில் இருந்தால் ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருக்க வேண்டும். மின்னல் தாக்கியவரை பாதுகாப்பான, உலா்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். சுவாசம் மற்றும் நாடித்துடிப்பை சரிபாா்க்க வேண்டும். அந்த நபா் சுவாசிக்கவில்லை என்றால் அவருக்கு சி.பி.ஆா். செய்ய வேண்டும். அதிகாரபூா்வ வானிலை எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கால்நடைகளையும். கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு முன் அவற்றைச் சரிபாா்க்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.