40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முழு தடை விதிக்க முடியாது

தில்லியில் ஜந்தர் மந்தர், போட் கிளப் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2018, 1:12 am IST

தில்லியில் ஜந்தர் மந்தர், போட் கிளப் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
ஜந்தர் மந்தர், இந்தியா கேட் அருகில் உள்ள போட் கிளப் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும். மக்கள் போராட்டம் நடத்துதற்கு உரிமை உள்ளது; அதே சமயம், மக்கள் அமைதியான சூழலில் வசிப்பதற்கும் உரிமை உள்ளது. முரண்பாடான இந்த உரிமைகளுக்கு இடையே சமநிலையைப் பேண வேண்டியது அவசியமாகும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, தலைநகர் தில்லியில் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து தேசியப் பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் எழுப்பப்படும் இரைச்சல் சப்தங்களின்றி, மக்கள் அமைதியான சூழலில் வசிப்பதற்கான உரிமையை அளிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். ஆனால், தலைநகர் தில்லியின் இதயப்பகுதியாக விளங்கும் கன்னாட் பிளேஸுக்கு மிக அருகில் உள்ள ஜந்தர் மந்தர் சாலையில், சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் மக்கள் வசிப்பதற்கான உரிமையை மாநில அரசு அளிக்கத் தவறிவிட்டது.
ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதால், இரைச்சல், தூய்மையின்மையால் சுகாதார சீர்கேடுகள் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, ஜந்தர் மந்தருக்குப் பதிலாக, அஜ்மீரி கேட் அருகில் உள்ள ராமலீலா மைதானத்தில் போராட்டங்களை நடத்தலாம்'' என்று தேசியப் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. 
இந்த உத்தரவை எதிர்த்து, மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் என்ற விவசாய அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.