பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி - திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை நியமிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி - திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
Updated on
1 min read

2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை நியமிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

2019 மக்களவைத் தேர்தலில் வலுவான பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கைகோர்த்துள்ளன. ஆனால், பிரதமர் வேட்பாளராக இந்த கட்சிகளுள் யார் நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் கூட்டணிக்குள் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் போன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். 

கொல்கத்தா தெற்கு எம்.பி., சுப்ரதா பக்ஷி்:

நரேந்திர மோடி அரசை 2019-இல் மம்தா பானர்ஜியால் மட்டுமே வெளியேற்றப்படும் 

செரம்பூர் எம்.பி., கல்யான் பானர்ஜி:

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் நரேந்திர மோடியை குஜராத்துக்கு திருப்பி அனுப்புவார்

அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகிம்:

மத்திய அரசால் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்ப மம்தா பானர்ஜிக்கு மட்டுமே தைரியம் உள்ளது. பிரதமர் இருக்கை மீது அவருக்கு பேராசை கிடையாது. மக்கள் நலனுக்காக அவர் தேவைப்படுகிறார்.

அமைச்சர் சுவேன்டு அதிகரி:

2019-இல் 42 மக்களவைத் தொகுதியையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றும்

மம்தா ஆதரவாளர்கள் இப்படி கருத்து தெரிவிப்பது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக மம்தா பானர்ஜியே, 'தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவித்தால், பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே பாதிப்பை ஏற்படும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com