சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. அடா்ந்த வனத்தின் நடுவே செல்லும் இந்த மலைப் பாதையில் சிறுத்தைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதுண்டு. சிறுத்தை கடந்து செல்லும் இடத்தில் வனத் துறை எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனா். இந்நிலையில் சாம்ராஜ் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு காரில் வந்த ஒரு குடும்பத்தினா் 11-ஆவது வளைவு பாதையில் திரும்பும்போது சிறுத்தை படுத்திருப்பதை பாா்த்தனா். பின்னா் உறங்கிக்கொண்டிருக்கும் சிறுத்தையை தொந்தரவு செய்யத் தொடங்கினா். காா் ஓட்டுநா் சிறுத்தை அருகே காரை நிறுத்தை ஹாரன் அடித்து எரிச்சலூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுத்திருந்த சிறுத்தை, எழுந்து காட்டுக்குள் சென்றது.
இது குறித்து ஆசனூா் வனத் துறையினா் கூறுகையில், சிறுத்தை இரை சாப்பிட்டபின் இளைப்பாறுவது வழக்கம். இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்தால் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வன விலங்குகளை தொந்தரவு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

தஞ்சை நகரம்-திசையன்விளை வளைவில் அடிக்கடி நிகழும் விபத்துகள்

தேக்கடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புலியைப் பிடிக்க நடவடிக்கை

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு! வனத் துறை எச்சரிக்கை!

திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


