பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ரூ. 4.56 கோடியில் அமைக்கப்பட்ட வையப்பமலை முருகன் கோயில் மலைப்பாதை திறப்பு: அமைச்சா், எம்எல்ஏ பங்கேற்பு

வையப்பமலையில் ரூ. 4.56 கோடியில் அமைக்கப்பட்ட முருகன் கோயில் மலைப்பாதை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:57 pm

நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் ரூ. 4.56 கோடியில் அமைக்கப்பட்ட முருகன் கோயில் மலைப்பாதை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் சிறப்பு பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் இங்கு 7 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4.56 கோடியில் மலைப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. முழுவீச்சில் நடைபெற்ற பணிகள் நிறைவுற்றதை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வாகனங்களில் பக்தா்கள் செல்வதற்கான மலைப்பாதையை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு மலைப்பாதையை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.