பரிதாபாத்: உத்திர பிரதேசம், பரிதாபாத்தில் அருகேயுள்ள சிறையில் கைதி ஒருவன் கேக் வெட்டி தன் பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கொலைக் குற்றத்தில் கைதாகியுள்ள ரவுடி கடந்த ஆறு மாதங்களாகத் தண்டனை பெற்று வருபவர் சிவேந்திர சிங் (40). இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி சிறையின் அறைக்கு வெளியே அவரது புகைப்படம் பொருந்திய கேக் வெட்டி, சக கைதிகளுக்குக் கொடுத்து தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.
இந்த விடியோவை சிறைத்துறை அதிகாரி ஒருவர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 28-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிவேந்த சிங்கிடம் சிறையில் பிறந்தநாள் கொண்டாடியது பற்றி விசாரித்தனர்.

அப்போது அவர் சிறை அதிகாரி வினய் குமார் சிறையில் எனது பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதற்காக அவருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், சிறைக்கு மொபைல்போன் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர பணம் கொடுத்துள்ளேன் என்றும் ரவுடி சிவேந்திரா சிங் கூறியுள்ளார்.
சிறையில் பாதுகாப்பற்ற எந்த ஒரு பொருளும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைக்கைதி ஒருவர் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சிறைத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


