தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிட்காயின் வழக்கு: குந்த்ராவிடம் 9 மணி நேரம் விசாரணை

பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், தொழிலதிபரும், ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2018, 8:43 pm

DIN

பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், தொழிலதிபரும், ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் குந்த்ரா செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அப்போது குந்த்ராவிடம், அவரது தொழிலில் பிட்காயின் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான அமித் பரத்வாஜுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொத்தம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு குந்த்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சாட்சி என்ற முறைப்படி எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனது அணியை அமித் வாங்க முயன்றார். ஆனால் பணம் செலுத்தாததால், அது தோல்வியடைந்து விட்டது' என்றார்.
பிட் காயினை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்யும் இணையதளம், அதன் நிறுவனர் அமித் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.