ஹைதராபாத்: பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் '9 பைசா' மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின், தொடர்ந்து 15 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்திக் கொண்டே வந்தன.
இதனால் பெட்ரோல் ஒரு லிட்டர் அதிகபட்சமாக ரூ.82க்கும், டீசல் ரூ.73க்கும் விற்பனையானது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில காசுகளை ஏதோ பெயரளவுக்குக் குறைத்து வருகின்றன. அதிலும் உச்ச பட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வெறும் ஒரு காசு மட்டும் குறைகப்பட்டது
எண்ணெய் நிறுவனங்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும் மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் '9 பைசா' மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்து கவுட். இவர்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 9 காசு காசோலையை அனுப்பியுள்ளார்.
அம்மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா பாஸ்கர் நேற்று 'பிரஜா வாணி' திட்டத்தில் பஙகேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த சந்து ஆட்சியரிடம் தன்னிடம் இருந்த 9 காசுக்கான காசோலையை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்து விடுமாறு கூறி அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண பாஸ்கரும் அதைப் பெற்றுக்கொண்டு அந்த இளைஞரை அனுப்பிவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



