கோவா எரிசக்தித் துறை அமைச்சர் பாண்டுரங்க மட்கய்கர் (53) பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோவா சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ராணே கூறியதாவது:
மும்பை சென்றிருந்தபோது அமைச்சர் பாண்டுரங்க மட்கய்கருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அந்த நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமுடன் இருக்கிறார் என்றார் விஷ்வஜித் ராணே.
பாண்டுரங்க மட்கய்கர் சம்பர்ஜுவா சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.