அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ராணுவ வீரர்களின் சீருடைகளை அவர்களே வாங்க வேண்டியுள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராணுவ வீரர்கள் சீருடைகளை தங்கள் சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது என்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 7:32 pm

DIN

ராணுவ வீரர்கள் சீருடைகளை தங்கள் சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது என்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், இந்தியாவில் தயாரிப்போம் என்று வெற்றி வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அதேவேளையில், நமது ராணுவ வீரர்கள் அவர்களின் சீருடைகளையும், காலணிகளையும் அவர்களே வாங்க வேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயுதங்களை 50 சதவீதமாகக் குறைக்கலாம் என்று இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளதாகவும், இதனால், ராணுவ வீரர்களுக்கான உடைகள், காலணிகள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட மாட்டாது என்பது ஊடகச் செய்திகளில் வெளியாகியுள்ளது. இதனால், வீரர்கள் ராணுவ உடைகளையும், காலணிகளையும் பொதுச் சந்தையில் விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.