ஆளுநர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தில்லி சென்றுள்ளார். ஆளுநர் மாநாடு நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்த போதும் அவர் தில்லியிலேயே இருக்கிறார்.
இந்நிலையில், அவர் பிரதமர் மோடியை இன்று (வியாழக்கிழமை) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஆளுநர் மோடியை சந்திப்பது இதுவே முதல்முறை. அதனால், இந்த சந்திப்பின் போது தூத்துக்குடியின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம்.
தூத்துக்குடி சம்பவம் குறித்து மோடி கருத்து தெரிவிக்காததற்கு அவர் மீது விமரிசனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









