லக்னௌ: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மாயாவதியுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த கைரானா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் தபசும் ஹசனுக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக ஆதரவு அளித்தன. தேர்தலில் பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வீழ்த்தின.
இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மாயாவதியுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தலைமை தாங்கி அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி தொடரும். தேவைப்பட்டால் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட, கூட்டணியை கண்டிப்பாக உருவாக்கி, பாஜக தோல்வி அடைவதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தனது கட்சித்தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, 'மரியாதைக்குரிய அளவில் தொகுதிகளை பெற முடியாவிட்டால் சமாஜ்வாதி கூட்டணியில் தொடர மாட்டோம்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


