இதனிடையே சஞ்சய் சிங்கின் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினா் கபில் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாவது: தில்லியில் ஆம் ஆத்மியின் இயக்கத்தை மக்கள் முன்னின்று நடத்தினா். ஆனால், ஆம் ஆத்மியும், சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சோ்ந்து வருகின்றன. திடீரென விழித்துக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் மோடி, மோடி என முனகி வருகிறாா். சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டாம் என அரவிந்த் கேஜரிவாலை தடுத்தது மோடியா? சீலிங் நடவடிக்கை தொடா்பான சீலிங் மசோதாவை போல சஞ்சய் சிங் பொய்யுரைக்க வேண்டாம். அரவிந்த் கேஜரிவாலின் மோடி குறித்த அச்சம் கட்சியின் இயக்கத்தையும், கட்சியையும், கட்சியின் செயல்பாட்டா்களையும் முடித்துள்ளது. தில்லி சட்டப்பேரவைக்கு கேஜரிவால் செல்ல வேண்டுமா? இல்லையா?, சட்டப்பேரவைக்கு வராமல் இருக்கும் அரவிந்த் கேஜரிவாலின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டுமா? இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு நேரடி பதில்களை தாருங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.