தீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
Published on
Updated on
1 min read

மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள அப்பாசாஹேப் மராதே மார்க் எனுமிடத்தில் உள்ள பிரபாதேவி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பியூமாண்டே டவர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை மதியம்  2.08 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பின் 33-ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 10 தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 95 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். இதுவரை உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26-ஆவது தளத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் வீடு அமைந்துள்ளது. சுமார் 2776 சதுரடி பரப்பளவில் 4 படுக்கையறை வசதி கொண்ட இந்த வீட்டை கடந்த 2010-ஆம் ஆண்டு தீபிகா வாங்கியுள்ளார். இந்த வீட்டை பிரபல வீடு வடிவமைப்பாளர் வினிதா சைதன்யாவைக் கொண்டு தீபிகா படுகோனே வடிவமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com