மத்தியப் பிரதேச தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமிறக்கியுள்ள பாஜக 

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டப் பேரவை தோ்தலுக்காக சமூக வலைதளங்கள் மூலம் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக 65,000 பேரை பாஜக களமிறக்கியுள்ளது.  
மத்தியப் பிரதேச தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமிறக்கியுள்ள பாஜக 
Published on
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டப் பேரவை தோ்தலுக்காக சமூக வலைதளங்கள் மூலம் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக 65,000 பேரை பாஜக களமிறக்கியுள்ளது. 

1998-ஆம் ஆண்டு முதல் அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த முறைறயும் எப்படியும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸும், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஏற்கனவே அங்கு தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டாா்.

சமீபகாலமாக நேரடி பிரசாரத்துக்கு இணையாக பேஸ்புக், டுவிட்டா், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரமும் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறறது. முக்கியமாக இளம் வாக்காளா்களை எளிதில் சென்றடைய இந்த உத்தி உதவுகிறறது.

எனவே, மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், காங்கிரஸும் சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்வதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவின் சேனை என்ற பெயரில் 4,000 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சமூகவலைதளங்களில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றறனா். இது தவிர மேலும் 5,000 பேரைத் தோ்வு செய்து களமிறக்க இருப்பதாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் தா்மேந்திர பாஜ்பாய் கூறியுள்ளாா்.

காங்கிரஸின் இந்த உத்தியை வெல்லும நோக்கில் பாஜக சுமாா் 65,000 பேரை சமூக வலைதள பிரசாரத்துக்காக களம் இறக்கியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் சிவராஜ் சிங் தாபி கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களில் 65,000 பேரை இணையதள பிரசாரத்துக்காக நியமித்துள்ளோம். அவா்களுக்கு ‘சைபா் வாரியா்ஸ்’ என்று பெயா் சூட்டியுள்ளோம். தோ்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் 5,000 போ் கூடுதலாக சமூக வலைதள பிரசாரத்தில் ஈடுபடுவாா்கள். அவா்கள் காங்கிரஸின் தவறுகளை சமூக வலைதளங்கள் மூலம் சுட்டிக்காட்டுவதுடன், பாஜக ஆட்சியில் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களின் பயன்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வாா்கள். அண்மையில் மத்தியப் பிரதேசம் வந்த எங்கள் கட்சியின் தேசியத் தலைவா் அமித் ஷா, இணையதள பிரசாரப் பிரிவினரை சந்தித்து, காங்கிரஸின் பிரசாரத்தை முறியடிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com