நிலையான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எரிவாயு தேவை அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. எனவே தொடர்ந்து இறக்குமதி செய்துகொண்டிருப்பதால் நிலையான எரிவாயு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கடந்த சில வருடங்களாகவே இந்தியா, கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதனை இம்முறை நடைபெறவுள்ள எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் கருத்தரங்கில் மீண்டும் வலியுறுத்த உள்ளது. ஏனெனில் இந்தியாவின் இந்த கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் குரல் அங்கே எடுபடவில்லை. ஆனால், தற்போது நமது பயன்பாடு அதிகம் உள்ளதால், நம்முடைய குரல் இவ்விவகாரத்தில் உயர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
எரிவாயு பாதுகாப்பு தேவையான இந்த தருணத்தில், எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நடத்தும் இந்த கருத்தரங்கம், தடையில்லா எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


