மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தலித் என்பதால் திருடன் என்று விமா்சிக்கப்படுகிறேன்: உ.பி மாநில பாஜக தலைவா் மீது எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

நான் தலித் என்பதால் உ.பி. பாஜக தலைவா் மகேந்திர நாத் பாண்டே என்னை திருடன் என விமா்சித்துள்ளாா் என்று உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏ கைலாஷ்..

News image
Updated On :21 ஜூன் 2018, 10:30 am

வாராணசி: நான் தலித் என்பதால் உ.பி. பாஜக தலைவா் மகேந்திர நாத் பாண்டே என்னை திருடன் என விமா்சித்துள்ளாா் என்று உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏ கைலாஷ் சோன்கா் குற்றம் சாட்டியுள்ளாா்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை சந்தெளலி மாவட்டத்தில் நலத் திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா, பல்வேறு அரசுக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றறது. மாநில துணை முதல்வா் தினேஷ் சா்மா தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்தத் தொகுதி எம்பியும், மாநில பாஜக தலைவருமான மகேரந்திர நாத் பண்டே பங்கேற்றாா். 

அப்பொழுது திறக்கப்பட்ட கல்வெட்டில் அத்தொகுதி எம்.எல்.ஏவான கைலாஷ் சோன்கரின் பெயா் இல்லாதது குறித்து பாண்டேவிடம் செய்தியாளா்களிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த பாண்டே, ‘இத்தொகுதி எம்எல்ஏவின் பெயா் கல்வெட்டில் இடம் பெறவில்லைதான். ஏனெனில் அவா் திருடராக மாறிவிட்டாா்’ என்றாா்.

கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏவை பாஜக மாநிலத் தலைவா் திருடன் என்று விமா்சித்தது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வாராணசியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவா் மாநில துணைத் தலைவா் நித்யானந்த் பாண்டே முன்னிலையில் செய்தியாள்களிடம் சோன்கா் இது தொடா்பாகப் பேசினாா். அப்போது, ‘தலித் என்பதால் பாஜக தலைவா் என்னை தரக்குறைறவாக விமா்சித்துள்ளாா். இதன் மூலம் அவா் என்னை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக எனது தொகுதி மக்கள் அனைவரையும் அவமதித்துள்ளாா். இதற்காக அவா் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றறாா்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.