ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்றுக் குழு அமைத்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :22 ஜூன் 2018, 2:23 pm

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்றுக் குழு அமைத்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து செயல்படவுள்ளது.

மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹுசைன் தலைவர் மற்றும் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.