ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜம்மு-காஷ்மீர் புதிய தலைமை செயலர் பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றார்.

News image
Updated On :23 ஜூன் 2018, 10:33 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றார்.

ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதனால் மெஹபூபா முஃப்தி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். கடந்த 1987-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இவர், கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்-இன் தனிச் செயலராக செயல்பட்டுள்ளார்.

இதுவரை ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலராக செயல்பட்டு வந்த பி.பி.வியாஸ், அம்மாநில ஆளுநர் வோஹ்ரா-வின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் கூட ஆளுநரின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.