ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவிரி ஆணையத்தில் மத்திய அரசு எங்களின் பொறுமையை சோதிக்கிறது: குமாரசாமி

காவிரி ஆணைய விவகாரத்தில் மத்திய அரசு எங்களின் பொறுமையை சோதிக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 ஜூன் 2018, 9:13 am

காவிரி ஆணைய விவகாரத்தில் மத்திய அரசு எங்களின் பொறுமையை சோதிக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து செயல்படவுள்ளது. 

மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹுசைன் தலைவர் மற்றும் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை எங்களைக் கேட்காமலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகு இக்குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கனவே கர்நாடகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு எங்களின் பொறுமையை சோதிக்கிறது. இதில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.