பிகாரில் பரபரப்பு: 10-ஆம் வகுப்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல்!

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் பரபரப்பு: 10-ஆம் வகுப்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல்!
Updated on
1 min read

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு விடைத்தாள்களை எடைக்குப் போட்டு ரூ.8,500 வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் உள்ள கோபால்ஜங் எனுமிடத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ் இன்டர் காலேஜ்-இல் இருந்து இந்த விடைத்தாள்களை எடைக்குப் போட்டுள்ளனர். இதில் மொத்தம் 216 பண்டல்களில் உள்ள 42 ஆயிரத்து 500 விடைத்தாள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக பழைய பொருட்கள் வியாபாரி பப்பு குமார் குப்தா மற்றும் அதை அங்கு கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்பாக நடைபெற்ற இச்சம்பவம், பிகார் பள்ளி தேர்வுத்துறை சில மாணவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ய கேட்டபோது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com