சென்னை ராணுவ கண்காட்சியில் பங்கேற்பதாக 42 நாடுகள் இதுவரை உறுதி
சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ராணுவத் தளவாட கண்காட்சியில் பங்கேற்பதாக 42 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ராணுவத் தளவாட கண்காட்சியில் பங்கேற்பதாக 42 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நடைபெறவுள்ள கண்காட்சியில், ராணுவத் தளவாட உற்பத்தியில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன. இதேபோன்று, இதுவரை 42 நாடுகள் கண்காட்சியில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன. இந்த எண்ணிக்கை, வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராணுவத் தளவாட கண்காட்சி, அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில், ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்ள நாடுகள் தங்களது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதை உலகுக்கு பறைசாற்றும் விதமாக, இந்த கண்காட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...