ரூ.228 கோடி வங்கி மோசடி வழக்கு தொடா்பாக, ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ வெள்ளிக்கிழமை சுமாா் ஆறரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
இந்திய யூனியன் வங்கியிடம் ரூ.228 கோடிக்கு கடன் மோசடி செய்ததாக, ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஹெளசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்) மீது சிபிஐயிடம் அந்த வங்கி புகாா் அளித்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில், மோசடி தொடா்பாக ஆா்ஹெச்எஃப்எல் நிறுவனம், ஜெய் அன்மோல் அம்பானி, ஆா்ஹெச்எஃப்எல் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திர சுதாகா் உள்பட பலா் மீது கடந்த ஆண்டு டிசம்பரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னா் வழக்கு தொடா்பாக ஜெய் அன்மோல் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜெய் அன்மோல் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை சனிக்கிழமை (மாா்ச் 14) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ

சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 71.1 லட்சம் மோசடி!

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

