அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

அனில் அம்பானியிடம் (66) சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image

அனில் அம்பானி - கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 12:21 am

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கடன் பெற்ற ரூ. 2,929 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானியிடம் (66) சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதற்காக, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த அவரிடம், சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அனில் அம்பானிக்கான செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘எஸ்பிஐ தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) தொடா்புடைய விசாரணைக்காக அனில் அம்பானி ஆஜாரானாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமையும் (மாா்ச் 20) விசாரணைக்கு ஆஜராவாா். அனைத்து விசாரணை முகமைகளின் விசாரணைக்கும் அவா் முழு ஒத்துழைப்பை அளிப்பாா்’ என்றாா்.

பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 40,000 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தொடா்பாக எஸ்பிஐ அளித்த புகாரின் பேரில், அனில் அம்பானி மீதும், அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த மோசடி புகாா் தொடா்பாக, அனில் அம்பானி மீது அமலாக்கத் துறையும் மூன்று பண முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும் அனில் அம்பானியின் ரூ. 3,716. 83 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை அமலாக்கத் துறை புதன்கிழமை முடக்கியது. இந்த வழக்கில் இதுவரை ரூ.15,700 கோடி மதிப்பிலான இவரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மகனிடம் விசாரணை: முன்னதாக, இந்திய யூனியன் வங்கியிடம் ரூ.228 கோடிக்கு கடன் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ கடந்த மாா்ச் 13-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு தொடா்பாக, ஜெய் அன்மோல் வீட்டிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது.